ஆடி மாத குலதெய்வ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ப்பு..!
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குருமன்ஸ் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஆண்டுதோறும் ஆடி மாதம் பாரம்பரிய திருவிழா நடத்துவது வழக்கம்.
இந்த பாரம்பரிய திருவிழாவில் பீசாகுல , குலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது குலதெய்வமாக வழிபடும் வீரபத்திரன் சாமிக்கு ஆடி மாத நாளில் இருந்து 28,29 ஆம் தேதி விரதம் இருந்து திருவிழா நடத்தினர்.
திருவிழாவில் குரும்மன்ஸ் இன் மக்கள் அனைத்து குல உறுப்பினர்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டு காவல் தெய்வம் வீரபத்திரன் சாமியை ஊர்வலம் எடுத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.
தொடர்ந்து சாமிக்கு படையில் வைத்து சிறப்பு பூஜை செய்த பின்பு அனைத்து பக்தர்களும்” வீரபத்திரா” என துள்ளி குதித்து வந்து தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு நடத்தி தங்களது நேர்த்திகடனை செலுத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து பக்தர்கள் சாட்டையடி வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாட்டையால் அடி வாங்கினால் குலம் சிறப்பாக இருக்கும் என பொதுமக்கள் சாட்டையடி வாங்கினார்கள் இந்த குருமன்ஸ் பழங்குடியினர் பாரம்பரிய திருவிழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-பவானி கார்த்திக்