என்றும் நம் மனதில் வாழும் ஒரு தலைவர்..!! கேப்டன் இப்படி பட்ட கேரக்டரா..?
தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் யார் மீதும் அன்பு வைக்க மாட்டாங்க. அப்படி வச்சிட்டா சாகுற வரைக்கும் மாறவே மாட்டாங்க…. அப்படி மக்களோட அன்பு பெற்றவர்தான் கேப்டன் விஜயகாந்த்….
நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி இதுதான் நடிகர் விஜயகாந்தோட இயற்பெயர். நடிப்பதற்காக மதுரையில் இருந்த சென்னை வந்த பிறகு தனது பெயரை விஜயகாந்த்னு மாத்திக்கிட்டாரு.
சினிமா வாய்ப்பு இவருக்கு ஒன்னும் உடனே கிடைக்கல. பல கட்ட போராட்டங்களுக்கு அப்புறமாக தான் கிடைச்சிச்சி. 1979-ஆம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில வெளியான “இனிக்கும் இளமை” அப்படிங்கிற படம் தான் விஜய்காந்தோட முதல் படம்.
அவரது சினிமா வாழ்க்கையில் “சட்டம் ஒரு இருட்டறை” அப்படிங்கிற படம் தான் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகள்ல ரீமேக் செய்யப்பட்டுச்சி.
அதன் பின் தமிழ் சினிமாவோட முன்னணி நடிகரா மாறிய விஜயகாந்த், “புலன் விசாரணை“, “சேதுபதி ஐபிஎஸ்“, “சத்ரியன்“, “கேப்டன் பிரபாகரன்“, “வானத்தைப்போல“, “தவசி“, “ரமணா” “சொக்கத்தங்கம்” அப்படின்னு 150 திரைப்படங்களுக்கும் மேல நடிச்சிருக்காரு. தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செஞ்சிருக்காரு விஜயகாந்த்.
பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் உடனான இவரது கூட்டணி தமிழ் சினிமாவில மிகப்பெரிய வரவேற்ப பெற்றது. 1986ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் என்ற படத்துல, பலரும் நடிக்கத் தயங்கிய காவல்துறை அதிகாரி டி.எஸ்.பி தீனதயாளன் வேடத்தில திரையில் தோன்றினார் நடிகர் விஜயகாந்த்.
தனது இமேஜ் பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம சற்று வயதான வேடத்தில் இந்த படத்தில் அவர் நடிச்சிருந்தாரு. தொடர்ந்து திரைப்பட கல்லூரியிலிருந்து வந்த தொழில்நுட்ப கலைஞர்களோட சேர்ந்து பணியாற்றி, உழவன் மகன், செந்தூரப் பூவே, காவியத் தலைவன் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்…
நடிகர் விஜயகாந்தோட திரைப்படங்களில் அதிகம் பேசப்படுவது என்னன்னா அவரது சண்டைக்காட்சிகள் தான். பல படங்கள்ல டூப் போடாம தானே நடிச்சி, தனெக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியிருந்தாரு.
நடிகர் விஜயகாந்தோட சினிமா வாழ்க்கையில 1984ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு என சொல்லலாம். அந்த ஆண்டுல மட்டும் விஜயகாந்த் நடிச்ச 18 திரைப்படங்கள் வெளியானது.
தன்னோட நடிப்புனால தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினாரு விஜயகாந்த். இவரோட படங்கள் வெளியானாலே, ஏதோ திருவிழாவுக்கு போகிறமாதிரி மக்கள் கூட்டம் கூட்டமா படையெடுத்து போனாங்க.
நடிகர் விஜயகாந்தோட நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் மிகப்பெரிய அளவுல வெற்றி பெற்றது. 1991ஆம் ஆண்டு, ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில வெளியான “கேப்டன் பிரபாகரன்“ திரைப்படம் வெள்ளிவிழா கொண்டாடிச்சி.
இந்த படத்துக்கு அப்புறமா சினிமா துறையிலும் சரி, ரசிகர்கள் மத்தியிலும் சரி அவரை கேப்டன் என்று அழைப்பார்கள்..
1993 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில நடிகர் விஜய் நடிப்பில வெளியான செந்தூரப் பாண்டி படத்துல விஜய்க்கு அண்ணனா கௌரவ வேடத்தில தோன்றியிருந்தாரு நடிகர் விஜயகாந்த்.
இதேபோல 1999-ல் வெளியான “பெரியண்ணா” படத்துலயும் நடிகர் சூர்யாவுக்காக கௌரவ வேடத்தில நடிச்சி கொடுத்தாரு, மறுபடியும் சூர்யா நடிப்பில வந்த மாயாவி படத்துலயும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருபார்.
இப்படி நடிப்புல கவனம் செலுத்திட்டு வந்த விஜயகாந்த் 1999-ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவரானாரு. அவர் தலைவரான சமயத்துல நடிகர் சங்கம் பெரும் கடன் சுமையில இருந்தது…
அதற்காக வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கடன்களை அடைத்தார். அதோடு மட்டும் இல்லாம நலிந்த கலைஞர்களுக்கு, உதவி செய்வதற்காக ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.
கேப்டன் விஜயகாந்த் என்று சொன்னாலே எல்லாருக்கும் நினைவிற்கு வருவது அள்ள அள்ள குறையாத அண்ணமிடும் அவரோட மிகச்சிறந்த குணம் தான்.
விஜயகாந்த் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்துல ஷூட்டிங் ஸ்பாட்ல சாப்பிட்டு கொண்டிருந்த போது ஹீரோ, ஹீரோயின் சாப்பிட்டு முடிச்சிட்டா உடனே ஷாட் ரெடின்னு கூறி விஜயகாந்தை அழைச்சிருவாங்களாம். இதுனால, இவரும், சாப்பாட்டை பாதியிலேயே நிறுத்திட்டு போயிடுவாராம்.
இந்த சம்பவங்கள் அவருக்கு நெருடலை தந்ததுனால தான் நல்ல நிலைக்கு வந்து இருக்காரு அப்புறமா.., எந்த பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு கொடுக்க ஆரம்பிச்சிருக்காரு.
நான் என்ன சாப்பிடறனோ அதே தான் எல்லாரும் சாப்பிடணும்னு சொன்னவரு தான் நம்ப கேப்டன் விஜயகாந்த்.
இப்படி சினிமாவுல பல உச்சங்களைத் தொட்ட கேப்டன் விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு, செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாடை நடத்தி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற தன்னோட கட்சியின் பெயரையும் அறிவித்தாரு.
அதன் பின் முழு நேர அரசியலில் இறங்குனாரு விஜயகாந்த். தொடர்ந்து அரசியல்ல எதிர்நீச்சல் போட்டுட்டு வந்த விஜயகாந்த் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சில காலம் வீட்டிலேயே முடங்கி இருந்தாரு.
இந்த ஒரு நிலையில உடல்நிலையில மோசம் ஏற்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் 2023, டிசம்பர் 28ம் தேதி காலமானார்.
கேப்டன் இறந்து விட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்ட உடன் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன் பின் பொதுமக்களோட படை சூழு ஊர்வலமா கேப்டன் விஜயகாந்த் உடல் எடுத்துவரப்பட்டு, கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தொடர்ந்து நாள்தோறும் கேப்டன் நினைவிடத்திற்கு சென்று ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்..,
இதற்கிடையில் தான் விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி, அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.
இந்நிலையில் டெல்லியில் மே 9ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் கேப்டன் விஜயகாந்திற்கு “பத்ம பூசன் விருது” வழங்கப்பட்டது. இந்த விருதினை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு பிரேமலதா விஜயகாந்த்திடம் வழங்கினார்.
ஒரு மனுஷன் பிரியும் போது தாய் அழுதா அவன் ஒரு நல்ல மகன், அவனோட புள்ளைங்க அழுதா அவன் நல்ல தகப்பன், அவன் கூட பொறந்தவங்க அழுதா அவன் நல்ல சகோதரன், அவன் பிரிவுக்காக நாடே அழுதா அவர் ஒரு நல்ல தலைவன்.. அந்த நல்ல தலைவர் தான் கேப்டன் விஜயகாந்த்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..