சாலையோரம் இனி மரங்களுக்குப் பதிலாக மிஷன்களை தான் பார்க்க முடியும் என்பது போல் செர்பியா நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள கண்டுபிடிப்பு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உலகின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 30க்கும் மேற்பட்ட நகரங்கள் உள்ளன. அந்த அளவுக்கு சுற்றுச்சூழல் மாசு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இடவசதி இன்மையால் மக்கள் மரங்களை நட்டு வளர்க்க முடியாமல் திண்டாடி வரும் நிலையில், மரத்திற்கு பதிலாக லிக்யூட் ட்ரீ என்ற கண்டுபிடிப்பை செர்பிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணாடி தொட்டிக்குள் தண்ணீர் மற்றும் மைக்ரோ ஆல்கே நிரப்பி உருவாக்கப்படும் இந்த லிக்யூட் ட்ரீ, நிஜ மரங்களைப் போலவே சுற்றுச்சூழலுக்கு மாசை உருவாக்கும் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியேவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது.