கொஞ்சம் சிரிப்பு..! நிறைய சிந்தனை..!
இந்த பதிவு படிக்க மட்டும் இல்லைங்க, நன்கு சிந்திக்கவும் கூட என்னென்றால் நாம் இயல்பு வாழ்க்கையில் நடக்கின்ற பல விஷயங்களை ஒப்பிட்டு பார்க்கையில் இவை அனைத்தும் ஒத்துப்போகும்.. அதை பார்ப்போமா.
நடிகருக்கும், மருத்துவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.. இரண்டு பேரும் நம்மை தியேட்டருல தான் சாகடிக்குறாங்க
சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா..?
சிவகாசில காச கரியாக்குவாங்க., நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க இது தான் வித்தியாசம். அப்படி சிரிச்சிட்டே அடுத்ததை படிங்க..
செல்போனுக்கும் மனிதனுக்கும் ஒரு வித்தியாசம் இருக்குங்க..
மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.
அட ஆமாங்க, நீங்க சொல்லுறது கேட்குது.. அப்படியே அடுத்ததையும் படிங்க..
ஓவ்வொரு இளைஞனின் மன உளைச்சலுக்கும் காரணம் என்னவா இருக்கும்னு நினைக்குறீங்க..?
மதிப்பெண்ணும், மதிக்காத பெண்ணும் தான் காரணம்.
கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா..?
கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும். எலிப் பொறியில் எலி உள்ளேயே இருக்கும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..