‘கல்லூரி மாணவிக்கு சுயமாக பிரசவம் பார்த்த காதலன்’ குழந்தை பலி!

கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவிக்கு காதலனே பிரசவம் பார்த்தலால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக சவுந்தர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையம் பகுதியை சேர்ந்த நர்மதா என்பவர் பொன்னேரி அரசுக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அவரும் அதே பகுதியை சேர்ந்த சவுந்தர் என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் கர்பமாகிய நர்மதா இதனை 8 மாதங்களாக வீட்டில் மறைத்து வந்துள்ளார். நர்மதாவுக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளதை அடுத்து அதனை காதலன் சௌந்தரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து நர்மதாவை அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற சௌந்தர் சுயமாக பிரசவம் பார்க்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அப்போது குழந்தையின் கை மட்டும் வெளியே வந்துள்ளது. தொடர்ந்து நர்மதாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் நர்மதாவின் வயிற்றில் இறந்து கிடந்த குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். இதனை தொடர்ந்து சௌந்தரை போலீசார் கைது செய்தனர்.

What do you think?

‘வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தல அஜித்’ வைரலாகும் புகைப்படம்

‘கொரோனா அறிகுறி’ மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்ட நபர்!