அரசு பேருந்து மீது மினிலாரி மோதி விபத்து…!! பரபரப்பான ஆம்பூர்..!!
ஆம்பூர் அருகே அரசு பேருந்து மீது மினி லாரி மோதி விபத்துகுள்ளானதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்..
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஜீரோ ஆக்ஸிடென்ட் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தது மேலும் தலைகவசம் அணியாவிட்டால் அபரதாம் வசுலிக்கபட்டு வருகிறது., இருசக்கர வாகனத்தில் பின்னே செல்பவர்களுக்கு தலைகவசம் அணிந்து இருக்க வேண்டும் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் போட வேண்டும் என நடைமுறை படுதபட்டாலும் விபத்துக்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது..
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகர பேருந்து மீது அதிவேகமாக வந்த மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த ஐஸ்வர்யா என்ற பெண் மற்றும் மினி லாரி ஓட்டுநர் சிலம்பரசன் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல்துரையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கு பின்னரே விசாரணைக்கான காரணங்கள் என்ன என்பது பற்றி தெரியவரும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..