அம்மன் சிலையில் நிகழ்ந்த அதிசயம்..!! மெய்சிலிர்த்த பக்தர்கள்..!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமையான அருள்நிறை கைலாயநாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோயிலில் உள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த அருள்நிறை கைலாதநாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது புதியதாக உமாமகேஸ்வரி அம்மன் சிலை இக்கோவிலில் நிறுவப்பட்டது. தொடர்ந்து இக்கோவிலில் பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறும் விசேஷ நாட்களில் இக்கோயிலில் நடைபெறும் சிறப்பு அலங்காரத்தை காண சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள்.
மேலும் சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் இக்கோவிலுக்கு பல்லாயிரம் பேர் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள் மேலும் வேண்டுதலை நிறைவேற்ற இக்கோவிலில் திருமணங்கள் நடைபெறும். இந்நிலையில் இக்கோவிலில் உள்ள உமாமகேஸ்வரி அம்மன் சிலையில் இருந்து மார்பு வழியாக தானாக பால் சுரந்து சிலையிலிருந்து தரைவரை வழிந்தோடி உள்ளது.
இதனை கண்ட கோவில் அர்ச்சகர் சுகுமார் உடனடியாக கோயில் நிர்வாகியும் ஒன்றியகுழு துணை தலைவருமான அருண்முரளிக்கு தகவல் தெரிவித்தார் ஊர் முக்கிய பிரமுகர்கள் வந்து பார்த்தபோது உமாமகேமேஸ்வரி அம்மன் மார்பிலிருந்து பால் வடியும் அதிசயத்தை கண்டு மெய் மறந்து நின்றனர்.
இந்த தகவல் காட்டு தீ போல் பரவிதால் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டு வந்து உமா மகேகேஸ்வரி அம்மன் மார்பிலிருந்து பால் வடியும் அற்புதக் காட்சியை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..