புட்லூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நிகழ்ந்த அதிசயம்..!
திருவள்ளூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள புட்லூர் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5.2 கி.மி தொலைவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில் தான் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்.
புட்லூர் இரயில் நிலையத்தில் இருந்து 10 நிமிடம் நடை பயணம் சென்றாலே கோவிலை அடைந்து விடலாம்.
நேற்று முன் தினம், புட்லூர் அம்மன் கோவிலுக்கு சென்று இருந்தேன். கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்து விட்டு ஓய்விற்காக அருகே இருந்த மண்டபம் சென்றேன்..
நாங்கள் அமர்ந்து இருந்த இடத்தின் அருகே ஒரு வளைகாப்பு விழா நடந்து கொண்டிருந்தது.. பக்கத்திலேயே மற்றொரு வளைகாப்பு விழா, சுற்றி எங்கு பார்த்தாலும் கர்பிணி பெண்கள், மற்றும் வளைகாப்பு விழாக்கள். சுமார் அன்று மட்டும் 20க்கும் மேல் வளைகாப்பு நடந்துள்ளது.
அன்று மட்டும் ஏன் ? இவ்வளவு வளைக்காப்பு நிகழ்ச்சி என நினைத்து அருகே இருந்த ஒரு பாட்டியிடம் சென்று கேட்டேன்.
இந்த கோவிலில் அதிக பட்சம் வந்து வேண்டுதல் வைப்பவர்கள் குழந்தை இல்லாமல் தவிப்பவர்கள் தான். எல்லாம் பெண்களுக்கும் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அம்மாவாக வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் ஒரு சிலர்க்கு அந்த வரன் கிடைப்பதில்லை. அப்படி குழந்தை வரன் இன்றி தவிக்கும் தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து முழு மனதோடு அம்மாவை வேண்டி. அம்மாவின் மடியில் எலும்பிச்சை பழம் வைத்து முந்தானையில் வாங்கி கொள்ள வேண்டும்.
வாங்கிய பழத்தை அம்மனின் அருகேயுள்ள நந்தி முன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் நிச்சயமாக குழந்தை வரம் கிடைக்கும் . அப்படி இந்த அம்மாவிடம் குழந்தை வரம் வேண்டி வாங்கிய பெண்கள், தங்களின் வளைகாப்பை இங்கே தான் நிகழ்த்துவார்கள்.
கர்ப்பமான பெண்கள் இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால் போதும். சுக பிரசவம் ஆகும். குழந்தை வரம் மட்டுமல்ல, தீய சக்தியின் பிடியில் மாட்டிக்கொண்டவர்கள் கூட.
கோவிலுக்கு வந்து, எலும்பிச்சை பழத்தை அம்மாவின் மடியில் வைத்து வாங்கி கொண்டு இல்லறத்தில் ஒரு மஞ்சள் துணியில் காட்டினாள் தீய சக்திகளை விரட்டும்.
முக்கியமாக அம்மனின் வரம் பெற்ற கர்பமானவர்களும் சரி, நினைத்த காரியங்கள் நடந்தவர்களும் சரி, அம்மாவிற்கு புடவை, வளையல், பொங்கல் வைத்து. வரிசை வைப்பார்கள்.
இந்த தொடரை படிக்கும் உங்களில் யாருக்காவது குறை இருந்தால் கட்டாயமாக புட்லூர் அங்காள அம்மனை சென்று வணங்கி பாருங்கள். முக்கியமாக குழந்தை வரம் வேண்டி தவிப்பவர்கள்.

கோடிக்கணக்கான பக்தர்களுக்கு அங்காள அம்மன் இஷ்ட தெய்வமாகவும் இருக்கிறார்.
மேலும் இது போன்ற பல தெய்வீக தகவல்களை தெரிந்து கொள்ள. தொடர்ந்து படித்திடுங்கள்..
வெ.லோகேஸ்வரி