நிபா வைரஸ் கட்டுபடுத்த கொண்டு வரப்பட்டுள்ள புதிய மருந்து..?
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த 126 பேர் கேரளா சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளனர்.
இதனால் தமிழக கேரளா எல்லையோரம் உள்ள சோதனை சாவடிகளில் பரிசோதனை தீவிரபடுத்தப் பட்டுள்ளது மேலும் கேரளாவில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்பவரை கண்காணிக்கவும், அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும் நிபா வைரஸ் எதிரொலியால் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பாதிப்பால் இதுவரை 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
77 பேர் வீடுகளில் தனிமை படுத்தப் பட்டுள்ளனர். 157 பேர் கண்காணிப்பில் உள்ளனர். சுகாதர பணியாளர்களில் 13 பேர் கோழிக்கோடு மருத்துமனையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். குட்டியாடி, ஆயஞ்சேரி பகுதியில் மத்திய குழுவீனர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அங்கு நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோரை கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
அதேபோல் நிபா வைரஸ் தொற்று காரணமாக புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நிஃபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து புதிய மருந்துகள் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு புதிய முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2018-ல் கேரளாவில் நிஃபா வைரஸ் பரவிவரும் நிலையில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் போதவில்லை என்பதால் ஆஸி.யில் இருந்து கூடுதல் மருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
“மோனோகுளோளல் ஆண்டிபாடி” எனும் புதிய மருந்து கொள்முதல் செய்ய முடிவு கேரள ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பு 6-ஆக அதிகரித்திருக்கும் நிலையில், மேலும் 2-பேர் உயிரிழந்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..