ஒரு கூட்டணியால் பிரிந்த கட்சி..? பாஜகவுடன் கைகோர்த்ததால் வெடித்த ஆட்டோபாம்..?
தேசிய கட்சிகளின் கோலாச்சும் கர்நாடக அரசியலின் கடந்த காலத்தை புரட்டி பார்த்தால் மதச்சார்பற்ற ஜனதாதளம் (ம.ஜ.த) கட்சியின் ராஜதந்திரங்களை புரிந்துகொள்ள முடியும்.., கொங்கு சட்டமன்றத்தில் பிரச்சனை ஏற்பட்ட சமையத்தில் சொற்ப உறுபினர்களை கொண்டு இரண்டு முறை முதல்வர் அரியணை ஏறிய பெருமை மஜதாவையே சேரும்..
அன்று கூட்டணி அமைத்துக்கொண்டு ஆட்சி செய்த மஜத.., இன்று மற்றொரு கூட்டணியால் அபாயநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது..
ம.ஜ.த தலைவரும், கர்நாடகவின் முன்னாள் முதலமைச்சருமான ஹெ.டி.குமாரசாமி, கடந்த மாதம் செப்டம்பர் 22-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை டெல்லியில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பிற்கு பிறகு, என்.டி.ஏ கூட்டணியில் ம.ஜ.த இணைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ம.ஜ.த-வின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகெளடா ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும் ஒரு அறிக்கை வெளியானது..
இதையடுத்து, கட்சியின் பெயரிலேயே “மதச்சார்பற்ற” என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து கொள்வதா..? என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எழுப்பிய கேள்விக்கு.., பதில் சொல்ல முடியாமல் அவர்கள் திகைத்துள்ளனர்..
இதனால் கட்சிக்குள் கலகம் வெடித்தது. அதன் பின் விளைவு, குமாரசாமியின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ அஷ்வத் உட்பட சில நிர்வாகிகள் காங்கிரஸில் இணைந்தனர்.
முக்கியமாக, சிறுபான்மையின மக்கள்.., இந்த கட்சியில் இவர்கள் சேர்ந்ததால் பலரும் கட்சியிலிருந்து விலகி சென்றனர். இதில், ம.ஜ.தவின் மாநிலத் துணைத் தலைவர் சையத் ஷஃபி உல்லாவும் (Syed Shafiulla) துணையாக இருந்துள்ளார்..
மதச்சார்பின்மையைக் கொள்கையாகக் கொண்ட ம.ஜ.த இந்துத்துவார கொள்கையுடன் சமூகங்கள், சாதிகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் கட்சியுடன் கைகோத்திருப்பதை என் மனம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றார் சையத்.
1996-ம் ஆண்டு நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அவ்வபோது 46 இடங்களில் மட்டுமே வென்றிருந்த ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகெளடா பிரதமரானார் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தொடங்கிய பிறகு, தேவகெளடாவின் யோகம் அவரது மகன் குமாரசாமிக்கும் ஜாக்பாட் அடித்தது.
2006, 2018 ஆகிய ஆண்டுகளில் 50-க்கும் குறைவான எம்எல்ஏ-களின் ஆதரவைக் கொண்டு கர்நாடகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார்..
பெரும்பான்மை இல்லாமலேயே பிரதமர், முதல்வர் பதவிகளைக் கைப்பற்றிய அப்பா, மகனுக்கு எதிராக இன்று ம.ஜ.த-வுடன் சேர்ந்து அவருக்கு எதிரான சில சதிகளை செய்து வருகிறார்..
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மஜத-வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், கர்நாடக மக்களுக்கு அந்தக் கட்சியின்மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதால் விவாதங்கள் அதிகரித்தன..
இந்நிலையில், என்.டி.ஏ கூட்டணி விவகாரத்தில் கட்சிக்குள் வெடித்திருக்கும் மோதல், மேலும் ம.ஜ.த-வை வலுவிழக்கச் செய்யும் என்றே தெரிகிறது.
பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துகொண்ட பல கட்சிகள் சில நாட்களிலேயே இரண்டாக உடைந்து பிரிந்து விடும்.. அந்த வரிசையில் தற்போது ம.ஜ.த-வும் இணைந்து விட்டது.., இந்த கூட்டணியாவது நிரந்தரமா இல்லையா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டுமென பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..