குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடிப்ப்ய் ஏற்ப்பட்டது.
இந்த தீ கட்டிடம் முழுவதும் வேகமாக பரவியதில், கட்டிடம் முழுவதும் புகையால் சூழ்ந்தது. தீயில் சிக்கி கொண்ட தொழிலாளர்கள் பதற்றத்தில் கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.
கட்டிடத்தில் இருந்த தொழிலாளர்கள் பலர் வெளியே ஓடிய நிலையில், அறைகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் உள்ளயே தப்பிக்க வழியில்லாமல் தின்டாடினர்.
மேலும் தங்களை காப்பாற்றும் படி அவர்கள் சத்தம் போட்டனர். இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில்,40 இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த தீ விபத்தில் ராமநாதபுரம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த கருப்பண்ணன் ராமு குவைத் நாட்டில் தங்கி சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார்.
குவைத் அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் உள்ள கட்டிடத்தில் அவர் தங்கியிருந்ததாகவும், அதில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
தகவலின்படி தற்போது கருப்பண்ணன் ராமு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவருடன் பணியாற்றி வந்த உறவினர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குவைத்தில் சென்று பணியாற்றி வந்த கருப்பண்ணன் ராமு தீ விபத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்சியும் ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்