அடைமழையில் ஒரு கவிதை – எழுத்துகிறுக்கச்சி கவிதைகள்- 20
நீ வர பல மாதங்கள் தவமா..
வந்த பின் திட்டி தீர்க்கும் மனிதர்களின் குணமே…
உன் ஒரு துளியில் குளிர்ந்து போகும் பூமியே..
நீ என்றும் விவசாயின் தாயே..
ஒரு குடைக்குள் செல்வோம்..
தோல்கள் உரசியே மழைத்துளிகளை ரசிப்போம்..
வெட்கத்தில் சிவக்கும் உன் முகங்களை
மழை துளிகள் திரையிட்டு மூடினால்..
அதை ரசிக்கும் நான் கிறுக்கனடி..
உன் குறும்பை கவிதையாக சொல்லும் கிறுக்கனடி…
காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு :
கண்ணீருக்கு நீ துணை..
கவிதை எழுதவும் நீ துணை..
தனிமையிலும் உன்னை மட்டும் ரசிக்கிறேன்..
உன் துளிகளில் நான் நனைகிறேன்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..