பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் உயிரிழப்பு..!! முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி..!!
சென்னை திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த கொரட்டூர் காவல் ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று திருப்பதி குடையானது நடைபயணமாக எடுத்து செல்லப்பட்டது இதனை பலரும் ஆர்வத்தோடு பார்க்க வந்தனர்., பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும்., கூட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது..
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் முத்துகுமார் திடிரென மயங்கி விழுந்து உயிர் இழந்துள்ளார்.. இந்த சம்பவம் மற்ற காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்நிலையில் உயிரிழந்த காவல் ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது., சென்னை, கொரட்டூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிவந்த திரு.முத்துகுமார் (வயது 47) என்பவர் இன்று (04.10.2024) சென்னையில் நடைபெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று மயக்கம் ஏற்பட்டு உடனடியாக சென்னை, முகப்பேரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிற்பகல் 01.15 மணியளவில் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.
காவல் ஆய்வாளர் திரு.முத்துகுமார் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
காவல் ஆய்வாளர் திரு.முத்துகுமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..