சகோதரிக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் மகன் பகிர்ந்த வைரல் புகைப்படம்!

ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா புர்கா அணிவது குறித்து எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் எழுப்பிய கேள்விக்கு. ஏற்கெனவே கதிஜா பதிலளித்திருந்த நிலையில் தற்போது ஏ.ஆர்.அமீனும் பதிலடி கொடுத்துள்ளார்.

பெங்காலிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் புர்கா அணிவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலளித்திருந்த கதிஜா ‘நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கும்போது, என் உடை ஏன் உங்கள் கண்களை உறுத்துகிறது’ என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், உங்கள் ஆய்வுக்காக நான் எனது புகைப்படத்தை அனுப்பியதாக நினைவில் இல்லை எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான புகைப்படத்தை பகிர்ந்து தனது சகோதரி கதிஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by “A.R.Ameen” (@arrameen) on

அந்த படத்தில் அமீன் தனது முகத்தை மறைத்தும், ரஹ்மானின் இளைய மகள் ரஹிமா முகத்தை மறைக்காமலும், கதிஜா புர்கா அணிந்தும் உள்ளனர். முகத்தை மறைப்பதாலும் வெளிக்காட்டுவதாலும் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை குறிப்பிடும் விதமாக அமீன் இப்படத்தை பகிர்ந்துள்ளார். சகோதரிக்கு ஆதரவாக அமீன் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

What do you think?

டிக்-டாக்கில் சாகசம் செய்த இளைஞர்; அறிவுரை கூறிய பியூஸ் கோயல் – Tik-Tok

சிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு வைகோ இரங்கல்