ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம் – பகுதி – 7
நம்பள பெத்த அப்பா அம்மாவை பத்தி யாரு தப்பா பேசுனாலும் நமக்கு கோவம் தான் வரும்.. அப்படி இருக்க. அபியோட அப்பா அம்மாவை.. இன்னைக்கு இல்லாம பண்ணி அவங்கள.. தனியா இருக்க காரணமா இருத்தவங்களை எதுவுமே பண்ண முடியலையேனு. விரத்தியில இருந்தாங்க அபி..
அதுக்கு அப்புறம் எல்லாம் விதி-னு அவங்க பணியில முழுமையா ஈடுபடாங்க. அப்போ தான் கிட்நாப்பார் சுஜி.., அந்த Business women அஹ கிட்நாப் பண்ணிட்டு அவங்களுக்கு கால் பண்றா..
அபி : ஹலோ..
சுஜி : என்ன அபி மேடம்.. அந்த ராதிகாவை பார்த்ததும் வீட்டுக்கு போனீங்க..
அபி : உனக்கு இப்போ என்ன வேணும்..?
சுஜி : எனக்கு எதுவும் வேண்டாம் மேடம்.. எங்க நீங்க சொல்லுங்க.. உங்க கிட்ட தப்பு பண்றவங்களை தண்டிக்குற எல்லாம் உரிமையும் இருக்கு ஆனா ஏன் பண்ண முடியல. அதான் நானே எடுத்துக்கிட்டேன்.
அபி : நாட்டுல தப்பு பண்றவங்கள விட இப்போ பண்ணாதவங்க தான் கம்மி.. அப்போ நீ எல்லாரையும் கிட்நாப் பண்ணிட முடியுமா..
சுஜி : எனக்கு எல்லாரையும் எல்லாம் தண்டிக்க வேண்டாம்.. இந்த 5 பேரோட சேர்த்து இன்னும் 2பேர் இருக்காங்க.. அந்த 7 பேருக்கும்.. நான் செய்ய வேண்டியதை செஞ்சிட்டு.. உங்க முன்னாடி வரன்..
அபி : யே ஹலோ…
அபி பேசிட்டு இருக்கும் போதே சுஜி கால் கட்பண்றா.., அப்போ தான் சுஜி சொன்னதை அபி யோசிக்குறாங்க.. இனிமே கிட்நாப் பண்ண போற அந்த 2பேரு யாரு..? இதுவரைக்கும் கடத்தப்பட்டவங்களுக்கும். இனிமே கடத்தப்போற வங்களுக்கும் ஏதாவது சம்மதம் இருக்குமா யோசிக்குறாங்க.
அதே சமயம் சுஜியோட போட்டோவச்சி.. அவளை பத்தி தெரிஞ்சிக்க பாக்குறாங்க.. அப்போ தான் அபிக்கு ஒரு முக்கியமான லீடு கிடைக்குது. அந்த லீடு என்ன என்று அடுத்த கதையில் படிக்கலாம்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..