வெயில் காலத்தில் முகம் கருக்காமல் இருக்க ஒரு ரகசியம்..!!
வெயில் காலத்தில் முகம் வறண்டு., இயற்கையான சருமத்தின் பொலிவை மங்கச் செய்கிறது. வெயிலில் செல்லும் பொழுது ஒரு சிலர் சன் ஸ்கீரின் போட்டு கொண்டு செல்வது வழக்கம்.., ஒரு சிலர் இயற்கையான பேஸ் ஃபேக் எதிர்பார்ப்பார்கள், அப்படி இயற்கையாக முகத்திற்கு பயன் படுத்தும் சில குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.
குங்குமப்பூ பால் பேஸ் ஃபேக் : 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில், 3 துளி எலும்பிச்சை சாறை விட வேண்டும். பின் அதில் சிறிதளவு குங்குமப் பூவை சேர்த்து கலந்து, முகத்தில் பூசி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகம் கழுவ வேண்டும். முகத்தை கழுவிய பின் மாய்ஸ்ரைசர் செய்ய வேண்டும்.
குங்குமப்பூ தயிர் பேஸ் ஃபேக் : 2 டேபிள் ஸ்பூன் தயிரில், சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை 1 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்தால்.., முகம் என்றும் பொலிவுடன் இருக்கும். கழுத்து மற்றும் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி விடும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..