கூந்தல் உதிர்வை குறைக்க ஒரு ரகசியம்..!
கூந்தல் உதிர்வு பிரச்சனை என்பது, பலருக்கும் பெரும் பிரச்சனையாக.., எவ்வளவு தான் முடிக்கு பராமரிப்பு கொடுத்தால்.. உதிர்வு மட்டும் குறையவே இல்லை என புலம்பபவரா நீங்கள்..? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்.
செம்பருத்தியில் உள்ள கெரோட்டின் உற்பத்திக்கு உதவும் அமினோ அமிலங்கள் முடிக்கு இயற்கை பிரகாசத்தை கொடுக்கிறது. செம்பருத்தியை பயன்படுத்துவதால், உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
* செம்பருத்தி பூ, மற்றும் இலையை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அல்லது செம்பருத்தியை காய வைத்து பொடி செய்துக்கூட எடுத்துக்கொள்ளலாம். இதை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து உச்சந் தலையில் தடவ வேண்டும்.
30 நிமிடம் கழித்து ஷாம்பூ கொண்டு தலையை அலச வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறையாவது இப்படி செய்தால், அழகான கூந்தல் பெறலாம்.
* பேன், பொடுகு தொல்லை நீங்க, செம்பருத்தி தேநீரை காய்ச்சி அதை குளிர வைக்க வேண்டும். ஷாம்பூ கொண்டு கூந்தலை அலச வேண்டும். அலசி பின் செம்பருத்தி தேநீர் கொண்டு அலச வேண்டும். இப்படி செய்தால் பொடுகு தொல்லை நீங்கி விடும்.
மேலும் இதுபோன்ற பல கூந்தல் பராமரிப்பு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.