தன்னம்பிக்கையோடு உழைக்கும் கை இழந்த பெண் – ஊரும் உறவும் -2
பெண்கள் சாதிக்காத துறை எதுவென்று கேட்டால் யாரிடமும் பதில் இல்லை. காரணம் கைத்தொழில் இருந்து, மருத்துவம், காவல், விமான இன்ஜினியர், முதலமைச்சர், குடியரசு தலைவர் வரை பெண்கள் பணியாற்றி சாதனை செய்துக்கொண்டு வருகிறோம்.
சில பெண்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற ஆசையும், திறமையும் அதிகமாகவே இருக்கும். ஆனால் அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு தான் கிடைக்காது.
அப்படி திறமையோடும், ஒரு நாள் நான் ஜெய்த்துவிடுவேன் என்ற கனவோடும், சுயத்தொழில் செய்து கொண்டிருக்கும். சுந்தரி அக்காவை சந்தித்தோம்.
யார் இந்த சுந்தரி அக்கா? அப்படி என்ன திறமை இருக்கிறது. என்று நீங்கள் கேட்கலாம். அவரை பற்றி இதோ..,
ஒரு நாள் இரயிலில் பயணித்து கொண்டிருக்கும் பொழுது, சூடான சுவையான முறுக்கு, ஓட்டைவடை, தட்டை என கத்தும் சத்தம் கேட்டது. சரி வாங்கலாம் என திரும்பி பார்த்தால் ஒரு அக்கா, ஒரு கை இல்லாமல் முறுக்கு, ஓட்டைவடை என அனைத்தையும் விற்றுகொண்டிருந்தார்.
கை இழந்த பின்னும் சுயமாக தொழில் செய்யும் அக்காவை பாரட்டுவதற்காக அவரின் பக்கத்தில் சென்று பொருளை வாங்கி கொண்டு பேச தொடங்கினோம்.
சிறு வயதிலேயே, ஒரு விபத்தில் என் கை பறிபோனது. நாங்கள் ஏழை குடும்பம் என்றதால் எனக்கு மருத்துவம் பார்க்க போதிய பணம் இல்லை.
எனக்கு படிக்க வேண்டும் என்று ஆசை ஆனால் எனக்கு கை இப்படி இருப்பதால் பள்ளியில் என்னோடு யாரும் பேச மாட்டார்கள். எப்பொழுதும் தனிமையில் இருப்பேன். அது எனக்கு மன வலியை ஏற்படுத்தியது.
அதனால் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டேன். என் அம்மா கை முருக்கு, தட்டை எல்லாம் சுவையாக செய்வாங்க அவங்க கிட்ட எப்படி செய்யனும் கத்துக்கிட்டு தொழில் தொடங்கினேன்.
ஆனால் சிலர் என்னை அதை செய்ய விட வில்லை, சிலர் வந்து மிரட்டவும் செய்தார்கள். மிகவும் மனா உளைச்சலுக்கு ஆளாகினேன்.
பின் இரயிலில் விற்பனை செய்ய தொடங்கினேன், ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும். நாளடைவில் பிடித்தது நிறைய லாபம் கிடைத்தது. கை, கால் உள்ள பெண்களை திருமணம் செய்துக்கொள்வே, அதிக வரதட்சணை கேட்கின்ற உலகம் இது. அதுவும் எனக்கு என்றால் ? அதனால் நான் திருமணமே செய்துக்கொள்ளவில்லை.
ஊனமுற்றவர்களுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகையை வைத்து, என் வீட்டு பக்கத்தில் ஒரு பெட்டிக்கடை திறந்தேன். ஆனால் ஆரம்பத்தில் எனக்கு உணவு கொடுத்தது, இந்த ரயிலில் விற்பனை செய்தது தான். அதனால் அதை எப்பொழுதும் நான் தொடர்ந்து செய்வேன்.