‘அமெரிக்காவின் டென்னிசியை கடுமையாக தாக்கிய சூறாவளி’ 25 பேர் பலி!

அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தை நேற்று கடுமையான சூறாவளி ஒன்று தாக்கியது. இந்த சூறாவளி தாக்குதலில் 25 பேர் பலியாகியுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் பல இடங்களிலும் அடிக்கடி சூறாவளி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும். அந்தவகையில் தற்போது அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தை நேற்று கடுமையான சூறாவளி ஒன்று தாக்கியது. இந்த சூறாவளி தாக்குதலால் ஏராளமான கட்டிடங்கள்,வீடுகள் சேதமடைந்தன.

மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்ததால் பல பகுதிகளிலும் மின்சாரம் தடைபட்டது. பல பொதுமக்களும் வீடுகளிலேயே முடங்கினர். சாலைகளில் ஆங்காங்கே வாகனங்கள் கவிழ்ந்து கிடந்தன.

சூறாவளியின் இந்த கொடூர தாக்குதலால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களை வரும் வெள்ளிக்கிழமை அன்று அதிபர் டிரம்ப் நேரில் சென்று பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது.

What do you think?

‘தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்வு’ பொதுமக்கள் அதிர்ச்சி!

‘உங்களால் தான் அப்பா’ நடிகர் விக்ரமிற்கு மகன் துருவ் எழுதிய உருக்கமான கடிதம்!