இந்த உலகில் எங்காவது ஒரு இடத்தில் ஏதேனும் விசித்திரமான சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும் அதில் பெரும்பாலும் அனைவரிடமும் போய் சேருவதில்லை அவ்வாறு தெரியும் சில விஷயங்கள் அனைவரையும் ஆச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது பலராலும் பேசபட்டு வருகிறது.
பிரேத பரிசோதனை பிரிவில் பணி செய்வது எளிதான ஒன்றாக இருக்காது. மன தைரியமானவர்கள் மன வலிமைமிக்கவர்களே அந்த சேவையை செய்வார்கள். ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு காரணத்தினால் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து வரும் அவர்களில் ஒருவர் தான் அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா என்பவர் இவர் ஒரு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் இது குறித்து கூறுகையில், தான் ஒன்பது ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருவதாகவும் தினமும் ஒரு ஒரு மனித உடல்களை கூறாய்வு செய்வது தான் தன்னுடைய வேலை என்று கூறினார். தொடர்ந்து, தான் ஒரு முறை கைவிடப்பட்ட அழுகிய நிலையில் இருந்த ஒரு மனிதரின் உடலை பிரேத பரிசோதனை சித்து கொண்டிருந்த பொழுது அந்த உடலிலி இருந்து ஒரு பாம்பு ஒன்று உயிருடன் வெளியே வந்ததை பார்த்ததாக கூறினார். அந்த பாம்பு அந்த நபரின் தொடை பகுதியில் இருந்து வந்ததாகவும் அந்த பாம்பை பார்த்ததும் பதறி அடித்து வெளியே ஓடியதாகவும் கூறினார்.
பின்னர் மற்ற பணியாளர்கள் அந்த பாம்பை பிடித்து சென்ற பிறகு தான் தனது வேலையை மீண்டும் தொடங்கியதாக கூறினார். இது குறித்த ஆய்வில், குளிர்ந்த பிரேத உடல்களில் பூச்சிகள், பாம்புகள் போன்றவைகள் அணுகாது ஆனால் சூடான அல்லது கதகதப்பான பகுதியில் இருக்கும் உடல்களில் இது போன்ற உயிரினங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இது போன்ற நிகழ்வுகள் அந்த உடல் எங்கிருந்து கண்டறியபடுகிறது என்பதை பொறுத்தே இது போன்ற சம்பவங்கள் நிகழும் என்றும் கூறினார். இவர் பிரேத பரிசோதனை செய்த அந்த நபரின் உடல் ஒரு ஓடையின் அருகில் இருந்து கண்டறியபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.