விளையாட்டு பயிற்சியின் போது மாணவனின் தலையில் பாய்ந்த ஈட்டி.. மூளைச்சாவு அடைந்தது எப்படி..!
கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவரின் மகன் கிஷோர்(15). இவர் வடலூரில் உள்ள (சீயோன் மெட்ரிக்)என்கிற தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவனுக்கு சிலம்பம் மீது இருந்த ஆர்வத்தினால் சிலம்ப போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.
இந்தநிலையில் கடந்த 24ம் தேதி மாணவன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி முடிந்து மாலை நேரம் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. சிறிய இடத்தில் நிறைய விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்ச்சி அளிக்கப்பட்டிருந்தது. அப்போது ஈட்டி எறிதல் பயிற்சியின் போது மற்றொரு மாணவன் ஈட்டியை வீசய போது அங்கு நின்ற கிஷோரின் தலையில் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலே கிஷோர் மயங்கி உள்ளார். உடனே மாணவனை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக அவர் அங்கிருந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மூளை சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மகன் மூளைச்சாவு அடைந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிஷோரின் தாய் தற்கொலைக்கு முயன்று விஷம் அருந்தியுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.
தற்போது மாணவர் உயிரிழப்புக்கு காரணம் பள்ளி நிர்வாகம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து தகவறிந்த வடலூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கிஷோரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, மருத்துவ குழு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
-பவானி கார்த்திக்