சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்பு கூடம்…!! AI தொழில் நுட்பம் பற்றி ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்…!!
ARR ஃபிலிம்சிட்டி சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்பு கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்கியது. இதற்கான துவக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே உள்ள ஐயர் கண்டி கிராமத்தில் ஏ ஆர் ஆர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் உலக அளவில் தமிழ்நாட்டில் புதிய படப்பிடிப்பு தலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் துவக்கி வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் முழுமையான தொழில் நுட்பப்பணிகளை வழங்கும் மெய்நிகர் தயாரிப்புக் கூடமான uStream, சென்னை ARR ஃபிலிம்சிட்டியில் தன்புத்தெழுச்சியான பயணத்தை 22nd September 2024 அன்று தொடங்குகிறது.
ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் மற்றும் தொழில்துறை முன்னோடி ஸ்ரீதர்சந்தானம் கூட்டணியில் uStream உருவாகிறது. இந்திய சினிமாவின் புதிய யுகத்தை வரவேற்க வழிவகுப்பதாய் இதுவடிவம் எடுத்திருக்கிறது.
வியப்பூட்டும் LED திரை அமைப்புகள் கொண்ட இந்த ஸ்டூடியோவில், கலைஞர்கள் கணினி காட்சி அமைப்புகளுடன் கற்பனை செய்ததை, நேரடியாக அந்தக்கணத்திலேயே கண்முன் காட்சிப்படுத்த முடிகிறது. இந்த நவீன டிஜிட்டல் நுட்பத்தைக் உலகப்பதிவுகள், அக்கணத்தின் கற்பனை காட்சிப்படுத்துதல், செயல்திறன் பதிவு, பலமெய்நிகர் காட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் simulcam நுட்பம், கேமராவின் உள்ளேயே செயல்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள் (ICVFX) கொண்டு உலகின் மெய்நிகர் தயாரிப்புத்துறையில் முன்னணியில் இருக்கிறது..
uStream என்பது படைப்பாற்றல் பணிகளை முழுமையாக செயல்படுத்தும் மெய்நிகர் தயாரிப்பு ஸ்டூடியோ (Virtual Production Studio). திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தீவிரப் படுத்தப்பட்ட XR தீர்வுகளை அளிக்கிறது. ஸ்டூடியோ பல்வேறு திரைச்செயல்பாடுகளை கொண்டுள்ளது..
Al மூலம் மேம்படுத்தப்பட்ட Previz, கலை மற்றும் வடிவமைப்பு செயல்பாடுகள், மெய்நிகர் உடைமை மேம்பாடு, VFX, DI (டிஜிட்டல் இடைநிலை) ஆகியவை உள்ளடங்கும். uStream Labs மூலமாக, புதியதலைமுறை மெய்நிகர் தயாரிப்பு திறமைகளை (Virtual Production Talent) வளர்ப்பதற்கான பயிற்சி திட்டங்களையும் வழங்குகிறது.
தற்போதைய LED சுவர்தொழில்நுட்பம், camera-to-cloud வேலைப்பொறி, விரிவுபடுத்த கூடிய பிந்தைய தயாரிப்பு தீர்வுகளை பயன்படுத்தி, உள்ளூர் மற்றும் பன்னாட்டுத் தயாரிப்பு களுக்கான திளைப்பூட்டும், உயர்தர மெய்நிகர்ச் சூழல்களை மகிழ்ச்சியுடனும் மதிப்பார்ந்த பெருமைகளுடனும் வழங்குகிறது என தெரிவித்தார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..