போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அசத்தல் அறிக்கை..!! இனி டென்ஷன் இல்லாம ட்ராவல் பண்ணலாம்..!!
ஆகஸ்ட் 15ம் சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மற்றும் பிற மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு மக்கள் பயணிக்க வேண்டி இருப்பதால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கு நாளை (புதன்கிழமை) 470 பேருந்துகளும், வருகின்ற 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 17ம் தேதி (சனிக்கிழமை) 365 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல நாளை 70 பேருந்துகளும் ஆகஸ்ட் 16 மற்றும் 17ம் தேதி 65 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.
அதேபோல் வருகின்ற ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் வருவதற்கு வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..