4 வயது சிறுவனை கடித்த தெரு நாய்.. பரிதாபமாக போன உயிர்.. கதறி துடிக்கும் பெற்றோர்..!
ராணிப்பேட்டை மாவட்டம் கணபதிபுரத்தை சேர்ந்த தம்பதியினரின் மகன் நிர்மல். 4வயதாகும் சிறுவனுக்கு இவருக்கு கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியில் விளையாடி கொண்டிருந்தபோது அங்கு வந்த தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது.
அந்த,வெறி நாய் சிறுவனின் முகம், தாடை உள்ளிட்ட பகுதிகளில் கடித்துக் குதறியுள்ளது. அதனால், ரத்தம் வழிந்து வலி தாங்க முடியாமல் சிறுவன் கதறி துடித்துள்ளான். பின்னர் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுவனின் பெற்றோர் அச்சிறுவனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமணையில் முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு ரேபிஸ் நோய் தாக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, ரேபிஸ் நோய்க்கான சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நிர்மல் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை வீட்டிற்கு எடுத்து செல்லாமல் நேரடியாக மயானத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
-பவானி கார்த்திக்