தேர்வு எழுத ரயிலில் சென்ற மாணவி; பாலியல் வன்கொடுமை செய்த 50வயது ஆண்..!!
மும்பை புறநகர் ரயிலில் தினமும் லட்சம் கணக்கான பெண் பயணிகள் பயணிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்காக காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை போலீஸார் பாதுகாப்பிற்காக செல்வது உண்டு. அப்படி இருந்தும் பல குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
அப்படி பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 20 வயது கல்லூரி மாணவி தேர்வு எழுதுவதற்காக ரயிலில் பயணித்துள்ளார். காலை 6 மணிக்கு சி.எஸ்.எம்.டி ரயில் நிலையத்தில் இருந்து போலாப்பூர் நோக்கி சென்று கொண்டு இருக்க.
அந்த பெண் ஏறிய நேரம் .., காவலர்கள் யாரும் இல்லை. ரயில் புறப்பட்டதும் அந்த பெண் ஏறிய அந்த பெட்டியில் ஒரு ஆண் எறியுள்ளார். அந்த ஆண் ஏறிய நேரத்தில் அந்த பெட்டியில் அந்த மாணவியை தவிர வேறு எந்த பெண்ணும் இல்லை.., எனவே அந்த ஆண் அந்த மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அடுத்த ரயில் நிலையம் வந்ததும் அந்த மாணவி, அந்த ஆணிடம் இருந்து தப்பித்து, ஆண்கள் பெட்டியில் எறியுள்ளார். மாணவியின் பயத்தையும் பதட்டத்தையும் பார்த்த அந்த ஒருவர் சென்று விசாரித்துள்ளார்.
மாணவியும் நடந்தவற்றை கூறியுள்ளார். உதவி செய்ய வந்த அந்த நபர் 1512 என்ற உதவி எண்ணை அழைத்து போலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் அங்கு வந்த பெண் காவலர்கள் மாணவியை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் நடந்த உண்மையை தெரிவித்துள்ளார், இரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் பாலியல் வன்கொடுமை செய்த நபரை தேடி வருகின்றனர். மாணவிக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, தேர்வு எழுதுவதற்கான உதவிகளை செய்துள்ளனர்.
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது மும்பையை சேர்ந்த 40 வயது நிவாஸ் என்பது தெரியவந்தது.., பின் அவரை பிடித்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். குற்றம் நடந்த 8 மணி நேரத்திலேயே குற்றவாளியை பிடித்துள்ளனர்.