அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு தரும் திருத்தலம்..!! இங்கு செல்ல மறக்காதீங்க…!!
வாழ்க்கையில் பெரும்பாலும் பொருட்களை தொலைத்துவிட்டு தேடுபவர்களை விட சந்தோஷம், துக்கம் மற்றும் நிம்மதியை தொலைத்து தேடுபவர்களே அதிகம்.. அப்படி நம் வாழ்க்கையில் தொலைந்த சந்தோஷம், துக்கம் மற்றும் தொலைந்த பொருட்கள் மீண்டும் கிடக்க இந்த திருத்தலத்திற்கு சென்று வழிபட்டால் போதும்., அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விடும்..
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருத்தலம் பற்றி இந்த ஆன்மிக குறிப்பில் படிக்கலாம்…
புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணம் என்ற ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் “கோகர்ணேஸ்வரர்” இங்கு எழுந்தருளியுள்ளார்.. இங்குள்ள அம்பாளை பிரகதாம்பாள் என்று அழைக்கப்படுகிறார்..
கோவிலின் வாசலில் பிள்ளையார் சன்னதியும், தக்ஷிணாமூர்த்தி சன்னதியும் அமைந்துள்ளது. காய்ச்சல் வந்து வேண்டினால் போக்கக் கூடிய ஜூரஹரேஸ்வரர் சன்னதி, சரஸ்வதி, லக்ஷ்மி, சுப்ரமணியர், வள்ளி, தெய்வாணை, பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளது.
பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் மன்னர் காலங்களில் எல்லாம் தினம்தோறும் பூஜைகள் நடைபெறும் என சொல்லப்படுகிறது.. அதே சமயம் மன்னர் காலத்தில் தினந்தோறும் அம்மனுக்கு திருவிழாவே நடக்குமாம். ஆனால் தற்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே திருவிழா நடத்தப்படுகிறது…
புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களின் இஷ்ட தெய்வம் என்று சொல்லப்படும் “ஸ்ரீ பிரகதாம்பாள்” அவரின் உருவத்தை புதுக்கோட்டையை ஆட்சி செய்த ராஜாக்கள் அம்மனின் உருவத்தை காசுகளில் பதிவு செய்து வைத்திருப்பார்களாம்.
அவ்வாறு பதிவு செய்த வைக்கப்பட்டிருந்த காசுக்கள் அரை வட்ட வடிவத்தில் இருப்பதால் பிரகதாம்பாள் அம்மனை “அரைக்காசு அம்மன்” என்று அழைக்கிறார்கள். ஒருமுறை சமஸ்தானத்தில் இருந்து அம்மன் உருவத்தால் அச்சடிக்கப்பட்டிருந்த காசு மற்றும் பாரம்பரிய நகை காணாமல் போயியுள்ளது…
பதறிப்போன மன்னர் குடும்பத்தினர்.., பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அம்மனிடம் முறையிட்டுள்ளனர்.. அம்மனிடம் முறையிட்ட சில நொடிகளிலேயே ஒரு இடத்தில் இருந்து ஒரு ஒளி மிளிர்ந்துள்ளது.. அப்போது அங்கு சென்று பார்த்தபோது தொலைந்த தங்கம் கிடைத்துள்ளது… இதனால் மகிழ்ந்த மன்னர் குடும்பத்தினர் அம்மனுக்கு விஷேச பூஜைகள் செய்துள்ளனர்..
இந்த தகவல் வெளியில் பரவ பல விஷேச சக்தி படைத்த தெய்வமாக அம்பிகை விளங்குகிறார்.. அம்பிகையை நினைத்து வெல்லம், நெய் வைத்தியம் செய்தால் அது கரைவது போல நம் வேதனைகள் எல்லாம் கரைந்து விடும் என சொல்லப்படுகிறது..
அம்பிகை அம்மனுக்கு எழுமிச்சை மாலை அணிவித்தால் தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும் என ஆன்மீக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.. மறுபக்கம் ராஜாக்கள் காலத்தில் இருந்து இன்று வரை அரைகாசு அம்மனிடம் தொலைந்த பொருட்கள் மீண்டும் கிடைக்க வேண்டும் என வேண்டுதல் வைத்தால் தொலைந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும் என்பது ஐதீக உண்மை..
இக்கோவிலில் உள்ள மூலவர் திருகோவர்ணேஸ்வரருக்கும் ஒரு சிறப்பு வரலாறு உண்டு அந்த வரலாறு பற்றி அடுத்த ஆன்மீக பதிவில் படிக்கலாம்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..