கூந்தல் உதிர்வை தடுக்க ஒரு டிப்ஸ்..!!
முடி உதிர்வு பிரச்சனை இன்று பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும்.., முடி உதிர்வை குறைக்கவும், இனி உதிராமல் இருக்கவும் இதை ட்ரை பண்ணுங்க.
மாம்பழம் :
மாம்பழத்தில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் இருப்பதால் நன்கு பழுத்த ஒரு மாம்பழத்தை துண்டு துண்டாக நறுக்கி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும், பின் அதில் 3 ஸ்பூன் தயிர் 1 முட்டை மஞ்சள் கரு சேர்த்து ஒன்றாக கலக்கி 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை முடியில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து ஷாம்பு கொண்டு முடியை அலச வேண்டும்.
கிவி பழம் :
கிவி பழத்தின் சதை பகுதியை மட்டும் 2 ஸ்பூன் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து 20 நிமிடம் தலையில் ஊறவைக்க வேண்டும்.
பின் 20 நிமிடம் கழித்து ஷாம்பூ மற்றும் கண்டிஷ்னர் போட்டு நன்கு ஹேர் வாஷ் செய்ய வேண்டும்.
வாழைப்பழம் மற்றும் காரட் :
ஓர் டம்பளர் கொதிக்க வைத்த நீரில் வாழைப்பழம் மற்றும் காரட் சேர்த்து பேஸ்ட் போல பிசைந்து தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
30 நிமிடம் கழித்து ஷாம்பூ கொண்டு ஹேர்வாஷ் செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒருமுறையாவது மேற்கண்ட ஹேர்வாஷ் டிப்ஸ்கள் பயன் படுத்தினால் முடி உதிர்வு குறைந்து விடும்.., ஹேர் என்றும் ஸ்மூத் ஆக இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திங்கள்