பண நெருக்கடியால் மன முடைந்த பெண் எடுத்த விபரீத முடிவு..!
சென்னை திருமங்கலம் வி.என். நகா் பகுதியை சோ்ந்தவா் ஷியாமளா (50). இவரது கணவர் இல்லாத நிலையில் தனது பிள்ளைகளுக்கும் திருமணமாகி சென்றதால் ஷியாமளா தனியாக வசித்து வந்தாா்.
இந்தநிலையில், ஷியாமளா ஏலச்சீட்டு, மற்றும் தீபாவளி பண்டு ஆகியவை நடத்தி வந்தாா். கடந்த ஆண்டு சீட்டு நடத்தியதில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவரால், சீட்டு கட்டியவா்களுக்கு பணத்தை திருப்பி வழங்க முடியாமல் இருந்துள்ளாா்.
இதனால் ஏலச்சீட்டில் இணைந்தவா்கள், தங்களது சீட்டுக்குரிய பணத்தை தருமாறு ஷியாமளாவிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர். இதனால் பணநெருக்கடி காரணமாக மன உளைச்சலில், இருந்த ஷியாமளா, திருமங்கலம் 100 அடி சாலையில் உள்ள ஒரு காலி மைதானத்துக்கு சென்று அங்கு தான் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் ஷியாமளா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்