திருப்பத்தூரில் வேன் மீது, லாரி மோதி விபத்து..!! நிதிஉதவி அளித்த முதலமைச்சர்..!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 24 நபர்கள் கடந்த வெள்ளிகிழமை தனியார் சுற்றுலா மினி பேருந்து மூலம் பெங்களூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
அப்போது, திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சண்டியூர் என்ற இடத்தில் வாகன பழுது ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியன் ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு சரி செய்துள்ளனர்.
வேனுக்கு பஞ்சர் ஓட்டிய போது வேகமாக வந்த லாரி, வேன் மீது மோதியதில் சாலை ஓரம் அமர்ந்திருந்த சுற்றுலான பயணிகள் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பழுதடைந்த வாகனத்தின் முன்னால் அமர்ந்திருந்த மீரா, தேவகி, கலாவதி, சாவித்ரி, உள்ளிட்ட ஏழுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார்,
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் அவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..