மத்தியப் பிரதேசத்தில் வலம் வந்த நோயுற்ற சிறுத்தையின் மீது அப்பகுதி மக்கள் சவாரி செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்ரேலா கிராமத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட சிறுத்தை ஒன்று வலம் வந்தப்படி இருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அந்த சிறுத்தையை தொந்தரவு செய்தும், அதன் மீது சவாரி செய்தும் வந்துள்ளனர். இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் நோயுற்ற சிறுத்தையை மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த சிறுத்தைக்கு 2 வயதாவது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/AjayTweets07/status/1696769198197035313?s=20