சாலைவசதி இல்லா கிராமம், சடலத்தை தூக்கி செல்லும் அவலம்..! கண்ணீர் வடிக்கும் மக்கள்..!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு அருகேயுள்ள ஜவ்வாதுமலை ஒன்றியம்கானமலை ஊராட்சிக்கு உட்பட எலந்தபட்டு கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
அந்த கிராமத்தில் விவசாயம், கூலித்தொழில், மேஸ்திரி வேலை உள்ளிட்ட வேலைகளை மலைவாழ் மக்கள் செய்து வருகின்றனர். அத்தியாவசிய உணவு பொருள்களான காய்கறி, அரசி, எது வாங்க வேண்டி இருந்தாலும் சுமார் 8கிமி தொலைவிற்கு நடந்து சென்று தான், வாங்க வேண்டி இருக்குமாம்.
இந்திய சுதந்திரம் அடைந்த ஆண்டில் இருந்தே, இந்த நாள் வரை சாலை வசதி இன்றி வாழ்ந்து வருகிறோம். நான்கு தலைமுறைகளை பார்த்து விட்டோம். இந்நாள் வரை எங்களுக்காக எந்த சலுகையும் கிடைத்தது இல்லை. பலமுறை மனு அளித்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு எலந்தப்பட்டு கிராமத்தை சேர்ந்த சாந்தி என்ற பெண் தீராத வயிற்று வழியால், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார், ஆனால் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.
மருத்துவமனையில் இருந்து சாந்தியின் உடலை அமரர்வாகனம் மூலம், சொந்த கிராமத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். படவேடு மலை பகுதி வந்ததும், இதற்கு மேல் வண்டி செல்லாது. இங்கேயே இறங்கி கொள்ளுங்கள் என்று சடலத்தை இறக்கி வைத்து விட்டு சென்றுள்ளனர்.
துடித்துப்போன சாந்தியின் 4 பெண் குழந்தைகள், சாந்தியின் உடலை அணைத்த படி அழுது கொண்டு இருக்க.., காண்போரின் நெஞ்சை உருக செய்தது . எனவே அந்த கிராம மக்கள் சாந்தியின் உடலை தோலில் சுமந்துக்கொண்டே 8 கிமி வரை நடந்து சென்று சடங்குகள் செய்துள்ளனர்.