மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயற்சித்த பெண்..!! காரணமான கணவனின் குடும்பம்..!!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு கை குழந்தைகளுடன் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின் அந்த பெண்ணை மீட்ட காவல் துறையினர், அரசு அலுவலர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையைச் சேர்ந்தவர் பெருமாள் இவருடைய மனைவி செல்வி இவர்களுக்கு இரண்டு கைக்குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் தனது குழந்தைகளை குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவர், கொழுந்தனார் ரமேஷ் மற்றும் மாமனார் ஆகியோர் அடித்து துன்புறுத்துவதாகவும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகவும் கூறி, இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, செல்வி தனது இரண்டு கை குழந்தையுடன் சென்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அவர்களை அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் அமர வைத்துள்ளனர், சிறிது நேரத்தில் தனது கைப்பையில் பாட்டிலில் வைத்திருந்த விஷத்தை செல்வி குடித்துள்ளார்.
இதனை பார்த்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருகோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..