திருமானூர் அடுத்த வெங்கனூர் சுடுகாடு அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக வெங்கனூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், வெங்கனூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி ராசாத்தி என்பதும், இவரது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கொலை குறித்து வழக்கு பதிவு செய்த வெங்கனூர் காவல்துறையினர் கொலை செய்தவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கழுத்தின் பின்பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.