லாரி ஓட்டுனராக 60 வயதிலும் ஓய்வின்றி உழைக்கும் பெண்..! ஊரும் உறவும்-26
சேலம் மாவட்டம் சங்கரகிரி ஆர்.எஸ்.பகுதியில் உள்ள பெரிய பனங்காடு கிராமத்தை சேர்ந்த கோபால் செல்வமணி என்ற தம்பதிகள். கோபால் என்பவர் 45 ஆண்டுகளாக லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகின்றனர்.
20 வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஒரு விபத்து நேர்ந்துள்ளது, அந்த விபத்தில் அவருக்கு கை, கால் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நேரத்தில் வீட்டின் குடும்ப சூழ்நிலைகளை அவரால் சமாளிக்க முடியவில்லை.
அந்த நேரத்தில் அவரின் மனைவி செல்வமணி தையல் வேலையை விட்டுவிட்டு லாரி ஓட்டும் தொழிலுக்கு சென்றுள்ளார். தையல் வேலையில் போதிய வருமானம் கிடைக்காததால், கணவர் செய்து வந்த தொழிலை இவர் செய்ய முயன்றுள்ளார்.
லாரி ஓட்டுவதே கடினமான தொழில் அதிலும் கனரக வாகனம் என்றால்.. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்கள் அதிகம் இயக்கி வந்த கனரக வாகனத்தை பெண்கள் ஓட்டுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என பலரும் கூறி வந்த நிலையில்.., என்னால் முடியும் என்று செல்வமணி கனரக வாகனம் மற்றும் லாரி இயக்கியுள்ளார்.
கடந்த 2004 ல் இருந்து அவர் லாரி ஒட்டி அதில் வந்த வருமானத்தில் கணவரின் உடலையும் குடும்ப பிரச்சனைகளையும் தீர்த்து வைத்துள்ளார். லாரி ஓட்ட தொடங்கிய 5 வருடத்திலேயே அவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது.
சர்க்கரை நோயையும் பொருட் படுத்தாமல் தொடர்ந்து அதை செய்து வந்துள்ளார். கணவரை உடலையே சரி செய்து நாடு முழுவதும் கணவன் மனைவி இருவரும் லாரி மற்றும் கனரக வாகனங்கள் இயக்கி வந்துள்ளனர்.
பின் சொந்தமாக லாரி வாங்கி 20 ஆண்டுகளாக் ஓட்டி வந்துள்ளார்.., தற்போது இந்த 65 வயது ஆன நிலையில் தொழிலை விட்டு பிரிய மனம் இல்லாமல் தவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்..
“தொழில் ” என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமான ஒன்று அது எந்த வேலையாக இருந்தாலும் உழைத்து செய்யும் வேலையை செய்யலாம்.. மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்று நாம் சிந்தித்தால்.., நம்மால் வாழ்க்கை நடத்த முடியாது என்று கூறி விட்டு மீண்டும் லாரி ஓட்ட சென்று விட்டார்.
மேலும் இதுபோன்ற பல உண்மை கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்