“மனித நேயம் கொண்ட பெண்மணி..” தனக்கென்று வாழாமல் பிறருக்காக வாழ்ந்த பெண்..!
சிறுவயதில் தன்னால் இயன்ற சேவைகளைச் செய்து வந்தவர். தனது 18 வயதில்தான் முழுநேர சேவையில் ஈடுபட நினைத்தார். வீட்டிலிருந்து விடுபட்டு “Sodality of children of Mary” என்ற அமைப்பைச் சேர்ந்த லொரெட்டோ சகோதரிகளின் சபையில் மறைப் பணியாளராக தன்னை இணைத்துக்கொண்டார். இவர் சேவைக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்தினால் எல்லாரிடமும் அன்னையாக மாறினாள்.
அன்னையின் வாழ்க்கையைக் குறித்து, அவரது ஆன்மீக, சமூக பின்னணியோடு விளக்கும் நூல். அன்னை ஏன் இந்தியா வந்தார், அதற்கான காரணம் என்ன ? அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்னென்ன..? கிறிஸ்தவ மதத்துக்குள்ளேயே அவர் எதிர்ப்புகளைக் கடுமையாய் சந்திக்கக் காரணம் என்ன?
தன் நகைச்சுவை உணர்வால், சிறுவயதிலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரிக்கும் திறனும் பெற்றிருந்தார். தனது இளமை பருவத்தில், கிருஸ்தவ மறைப் பணியாளர்களாலும் அவர்களது சேவைகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு தனது பன்னிரண்டு வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார்.
அதன்படி ஏழை எளியவர்களுக்கு, உடல் ஊனமுற்றோருக்கு, பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்துவந்ததோடு, தேவாலயங்களைப் பெருக்கி சுத்தம் செய்தல், மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுதல், மருத்து வைத்து விடுதல் ஆகிய பணிகளைச் செய்ததும், அனைவரிடமும் இனிமையான வார்த்தைகளையே பேசுவார்.
அன்னை தெரசா பெயர் வந்த காரணம் :
அன்னை தெரசா, ஆக்னஸ் கான்ஸ்ஸா போஜக்ஹியு, 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பிறந்தார். 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இறந்தார். அல்பெனியன் இந்தியன் ஆவார். “அன்னை தெரசா” எனும் பெயரை ‘அன்னை’ எனும் சொல் இல்லாமல் யாரும் சொல்வதில்லை. கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடியும், கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும்.
“அன்பு தான் உனது பலவீனம் என்றால் உலகில் மிகப்பெரிய பலசாலி நீ தான்” என்ற வார்த்தைக்கு முழு வடிவமாக இருந்தவர். 1929ம் ஆண்டு இந்தியா வந்து டார்ஜிலிங்கில் கிறிஸ்தவ மத பணிகளில் ஈடுபட்டார். கொல்கத்தாவின் சேரிகளில் இருந்த வறுமையைக்கண்டு ஏழைகளுக்கு சேவை செய்ய செவிலியர் படிப்பை பயின்றார்.
பின்னர் பள்ளி துவங்கி சேவை, நோயாளிகளுக்கு சேவை, தொழு நோயாளிகளுக்கு மருத்துவ சேவை என உலகம் முழுவதும் வறுமை, போர், பஞ்சம் என சேவையை தனது வாழ்நாள் லட்சியமாகக்கொண்டு செயல்படுத்தினார். இவர் உருவாக்கிய மிஷனரி ஆஃப் சாரிட்டீஸ் என்ற அமைப்பு உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. இடையில் தன் பெயரை அன்னை தெரசா என்று மாற்றிக்கொண்டார்.
1962ம் ஆண்டு அன்னை தெரசாவின் சேவைகளை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
1972 -ல் பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது.
1979-ல் அமைதிக்கான நோபல் பரிசு.
1980- இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது.
1996- அமெரிக்காவின் கெளரவ பிரஜை.
இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பல்கலைக்கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டங்கள் 2003-ல் ‘அருளாளர்’ பட்டம் பெற்றார்.
தன வாழ்நாள் முழுவதையும் எல்லா மக்களுக்காகவும், நோயாளிக்காகவும் உழைத்த அவரது உடலில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. 1989-ம் ஆண்டு இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி 87 வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
– துர்கா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..