காரில் சென்ற இளைஞர்… திடீரென கடலில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட சோகம்..!
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சீனிவாசன் குரு தூரி (38). இன்ஜினியரான இவர் சம்பவ தினத்தன்று அடல் சேது பாலம் அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காரை நிறுத்திய அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் தகவறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் இளைஞரின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றன..
-பவானி கார்த்திக்