ஆச்சி மசாலா நிறுவன தொழிற்சாலை..!! இந்திய அரசின் உற்பத்தி..!! பத்மசிங் ஐசக் பேச்சு..!!
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை பண்பாக்கத்தில் புதிதாக அமைந்துள்ள ஆச்சி மசாலா நிறுவன தொழிற்சாலையில் இந்திய அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் பிஎல்ஐ ஆட்சியின் பங்களிப்பு குறித்த கலந்துரையாடல் மற்றும் புதிய தொழிற்சாலை திறப்பு விழா நடைபெற்றது.
மத்திய உணவுபதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் திட்டமேலாண்மை நிறுவனத்தின் சார்பில் இந்திய அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் (PLI) உள்நாட்டில் உற்பத்தி திறனை உயர்த்தவும், ஏற்றுமதியை பெருக்கவும் வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது.
இந்தியாவில் 14 துறைகளை சேர்ந்த தலைசிறந்த நிறுவனங்களை தேர்வு செய்து அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். இதில் முக்கியத்துவம் வாய்ந்த உணவுபதப்படுத்தும் துறையில் ஆட்சி உணவு குழுமத்தை தேர்வு செய்தது. இந்த திட்டத்தின் மூலம் ஆட்சிமசாலா நிறுவனம் 84.66 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது.
அதில் தொழிற்சாலைகளின் உள்கட்டமைப்பிற்கான சுமார் 45 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. நவீன இயந்திரங்களின் பயன்பாட்டு வகையில் 40 கோடி முதலீடு செய்துள்ளனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பண்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் ஆச்சி தொழிற்சாலையில் ஒரு லட்சத்து பத்தாயிரத்து சதுரடி அளவுக்கு கட்டமைப்பினை உருவாக்கி அங்கே அதிநவீன முறையில் மிகசுகாதாரமான ஊறுகாய் மற்றும் ரெடி டூ குக் உணவு வகைகள் தயாராகின்றன.
ஆண்டுக்கு 3 ஆயிரம் மெட்ரிக்டன்னில் இருந்து உற்பத்தியை ஆறாயிரம் மெட்ரிக்டன்னாக உயர்த்துகின்றனர். அதாவது உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பண்பாக்கத்தின் மேலும் 50 ஆயிரம் சதுரடியில் உட்கட்டமைப்பை மேற்படுத்தி ஆண்டுக்கு ஒன்பதாயிரம் மிளகாய் அரவை செய்யப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் மேல்முதலம்பேடு கும்மிடிப்பூண்டி, அலமாதி, கோலடி இடங்களில் உள்ள தொழிற்சாலைகளையும் மேம்படுத்தப்பட்டு அங்கு சுமார் ஒருலட்சம் சதுரஅடி பரப்பில் ஆண்டுக்கு 11/ 28 மெட்ரிக்டன் அளவுக்கு மசாலா பொருட்களை அரவை செய்கின்றனர்.
இந்த தொழிற்சாலைகளில் உள்ள அனைத்து துறைகளுமே அதிநவீன கட்டமைப்புகளோடு இயங்குகிறது. இந்த நிறுவனத்தில் 420 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதில் 290 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான திட்டவிழா டெல்லியில் நடைபெற்றது.
இதன் காணொளி காட்சி மூலம் இந்தவிழாவில் ஆட்சி உணவு குழுமத்தினர் பண்பாக்கத்தில் தொழிற்சாலையில் பங்கேற்றனர். பின்னர் ஆச்சி மசாலா கம்பெனியின் புதிய தொழிற்சாலையிணை குழுமத்தலைவர் பத்மசிங் ஐசக் திறந்து வைத்தார்.
2023-24 நிதியாண்டில் ஆட்சி உணவு குழுமம் 2200 கோடி ரூபாய் விற்பனையை பதிவு செய்திருக்கிறது. அடுத்து 3000 கோடி என்ற விற்பனை இலக்கை எட்ட உள்ளதாகவும் 2025 ஆம் ஆண்டிற்குள் ஐந்துட்ரில்லியன் டாலர் என்பது பாரத பிரதமர் நரேந்திரமோடியின் பொருளாதார இலக்காக உள்ளது என்றும் அதற்கான பங்களிப்பை ஆட்சிமசாலா வழங்கும் என்றும் ஆச்சி உணவு குழுமத்தின் தலைவர் ஏ.டி. பத்மசிங் ஐசக் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..