ஆதார் பெற பொய்யான தகவல்; 127 பேருக்கு நோட்டீஸ்

தெலங்கானாவில் பொய் தகவலை அளித்து ஆதார் எண் பெற்ற 127 பேருக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹைதராபாத்திலுள்ள இந்திய தனித்துவ அடையாளம் ஆணைய அலுவலகத்தால் அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியோருக்கு ஆதார் அளிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும், இந்நிலையில் பொய் தகவலை அளித்து 127 பேரும் ஆதார் எண் பெற்றிருப்பதாக போலீஸாரிடம் இருந்து அறிக்கை வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 20-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி 127 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனவும், இதற்கும் குடியுரிமைக்கும் சம்பந்தமில்லை, புகார் உறுதியானால் ஆதார் எண் மட்டுமே ரத்து செய்யப்படும் என அந்த ஆணையம் கூறியுள்ளது.

What do you think?

ஆண்களும் கருத்தடை செய்துகொள்ள வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

“CAA போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா”? – நெல்லை முபாரக் கேள்வி