February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் இந்தியா

“24 மணி நேரத்தில் 10 லட்சம்”!!! – ஆம் ஆத்மி அறிவிப்பு?

கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிற மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. பாரதிய ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்தன, காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. டெல்லி ராம்லீலா மைதானத்தில் 16-ந் தேதி நடைபெறும் விழாவில், கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய், அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பிற மாநில முதலமைச்சர்களையோ, அரசியல் கட்சி தலைவர்களையோ அழைக்கப்போவது இல்லை என தெரிவித்துள்ளார். அவரது தலைமை மீது நம்பிக்கை கொண்ட டெல்லி மக்கள் முன்னிலையிலேயே கெஜ்ரிவால் பதவி பிரமாணம் செய்து கொள்வார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி எதிரொலியாக ஆம் ஆத்மி கட்சியில் சேர மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். “கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் கட்சியில் இனைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.”

Related posts

இந்தியா-இலங்கை குறித்த பேச்சுவார்த்தையில் மகிந்த ராஜபக்சே

Digital Team

கட்டுக்குள் வராத கொரோனா; பலி எண்ணிக்கை 1,868 ஆக அதிகரிப்பு

Digital Team

பிப்ரவரி 14ஆம் தேதி அதிமுகவின் கடைசி பட்ஜெட்

Digital Team

பப்ஜி விளையாட்டில் மோகம்; பேரனே பாட்டியை கொன்ற சோகம்!

Digital Team

‘கோவிட்-19’ என பெயர் மாறிய கொரோனாவால்; சீன அதிபருக்கே இந்த நிலைமையா?

Digital Team

கேரளாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது – பினராயி விஜயன்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam