அசுர பலத்துடன் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62 இடங்களில் வென்று; டெல்லி தர்பாரின் மாஸ்டராக அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக அரியணை ஏற உள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 62.59 விழுக்காடு வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியதுபோலவே ஆம் ஆத்மி கட்சி தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்ததுடன், 70 தொகுதிகளில் 63 இடங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது.

பா.ஜ.க 8 இடங்களில் வெற்றி பெற்றது, ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறமுடியாத காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நியூ டெல்லி தொகுதியில் வெற்றி பெற்றார். துணை முதலமைச்சர் மணீஷ் சிஷோடியா தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தாலும் முடிவில் பா.ஜ.க வேட்பாளர் ரவீந்தர்சிங் நேகியை தோற்கடித்தார். ஆட்சியமைக்க 36 இடங்களே போதுமான நிலையில் 62 இடங்களை கைப்பற்றி அசுர பலத்துடன் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி அரியணையில் ஏறி உள்ளது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து 3-வது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்க உள்ளார்.

இதனையொட்டி டெல்லியில் ஆம்ஆத்மி தொண்டர்கள் பட்டாசு வெடிக்காமல், ஆட்டம் பாட்டம் என வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். தொண்டர்களிடையே உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்து 3வது முறையாக ஆட்சி செய்ய வாய்ப்பளித்தது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், 5 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறிய அவர், இந்த வெற்றியை ஐ லவ் யூ எனக் கூறி பிறந்தநாள் கொண்டாடும் தனது மனைவிக்கு சமர்பித்தார்.

What do you think?

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதி – கீழமை நீதிமன்றத்தில் பெறலாம்

அரவிந்த் கெஜ்ரிவால் 3.O – தலைவர்கள் வாழ்த்து