சருமத்தை ஜொலிக்கவைக்கும் ஆவாரம்பூ..!
சருமத்திற்கு சோப்பு போட்டு குளிப்பதற்கு பதில் மூலிகையால் ஆன பவுடரை கொண்டு குளிப்பதினால் சருமம் மிகவும் பொலிவடையும். அதுமட்டும் இல்லாமல் கரும்புள்ளிகள், தேமல் போன்றவை மறையும்.
பாசிப்பருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சளுடன் ஆவாரம்பூவை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு வசம்பும் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ADVERTISEMENT
ஆவாரம் பூ பொடியை சருமத்திற்கு தேய்த்து குளித்தால் மேனி பொன்னிறமாகும். ஆவாரம் பூ பொடியில் தேநீர் போட்டு குடித்தாலும் இரத்தம் சுத்தமாகும்.
ஆவாரம் பூவுடன் பச்சைப்பயிரை தண்ணீரில் ஊறவைத்து இரண்டையும் சேர்த்து அரைத்து உடல் முழுக்க தேய்த்து குளிக்கலாம்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.