வயிற்று வலி.. சிறுமியை ஸ்கேன் செய்த மருத்துவர்கள்.. ரிசல்ட் மூலம் தெரியவந்த சிறுவன் செய்த லீலை..
சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்த 4 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த சிறுமியை அவரது தாய் உடனே சேலம் அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்க்கு சிறுமி 3 மாத கால கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் உடனடியாக இதுகுறித்து அம்மாப்பேட்டை மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்படி விரைந்து வந்த மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரனையில் அதே பகுதியை சேர்ந்த 14வயது சிறுவன், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அச்சிறுமி கூறியுள்ளார்.
அந்த சிறுவன் 7ம் வகுப்பு முடித்த நிலையில், வரும் 10ம் தேதி 8ம் வகுப்புக்கு செல்கிறார். அச்சிறுமியின் தாய் வீட்டு வேலைக்கு செல்வதால் காலையில் சென்றால், மாலையில் தான் வீடு திரும்புவாராம்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் எல்லோரும் ஒன்றாக விளையாடுவார்கள். இதில் சிறுமிக்கும், அந்த சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் அங்கிருந்த காட்டுப்பகுதிக்கு தனியாக சென்று நெருக்கமாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்ததுள்ளது. மேலும் இது குறித்து, சிறுவனிடமும் விசாரணை நடத்தப்பட்டபோது அவனும் உண்மையை ஒப்புக்கொண்டான்.
இதனை தொடர்ந்து, அந்த சிறுவன் மீது போக்சோ பதிவு செய்யப்பட்டு சிறுவனை இளம்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து சிறுமிக்கு மரபணு சோதனை நடத்த நடடிவக்கை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் சேலம் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-பவானிகார்த்திக்