சம்மரில் கூந்தல் வளர்ப்பு பற்றி..ஒரு டிப்ஸ்..!!
சாதாரண நாட்களில் கூந்தலை பராமரிப்பதை விட இந்த கோடை காலத்தில் பராமரிப்பது தான் மிகவும் கடினமான ஒன்று, வீட்டில் இருந்தே எளிமையாக தாயாரிக்க கூடிய ஒரு கண்டிஷ்னர் பற்றி பார்க்கலாம்.
தேன் : ஆலிவ் ஆயிலுடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து வேர் முதல் நுனி வரை, தடவ வேண்டும்.
30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் அலச வேண்டும், அவ்வாறு செய்தால் கூந்தல் மென்மையாக இருக்கும்.
முட்டை : வலுவான கூந்தலுக்கு ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெயுடன் ஒரு முழு முட்டை அல்லது அதன் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து அதில் கலந்து 20 நிமிடங்கள் தலையில் தடவி ஊற வைக்க வேண்டும்.
பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.
வாழைப்பழம் : கூந்தல் உதிர்வை தடுக்க வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதில் இரண்டு ஸ்பூன் தயிர் மற்றும், ஒரு ஸ்பூன் தேன் கலந்து தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து, தலையை அலச வேண்டும்.
வாரத்திற்கு இரு முறை இப்படி செய்தால் போதும்.
தயிர் : உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் தேன், தலைக்கு குளிர்ச்சி அளிக்கவும் உதவுகிறது. ஒரு கப் தயிரில், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து, தலையில் தடவ வேண்டும்.
கூந்தலில் நன்றாக தடவி 30 நிமிடம் கழித்து அலச வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
– வெ.லோகேஸ்வரி