‘கொரோனா அச்சம்’ இனி AC வகுப்பு பயணிகளுக்கு கம்பளிகள் கிடையாது!

கொரோனா வைரஸ் பரவி வருவதால் இனி AC வகுப்பு பயணிகளுக்கு கம்பளிகள் வழங்கப்படமாட்டாது என்று தெற்கு மற்றும் மேற்கு ரயில்வே நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் கடுமையாக தாக்கி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்திய ரயில்வே நிர்வாகங்களான தெற்கு ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே சார்பிலும் கொரோனா குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக ஏசி வகுப்பு பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு இனி கம்பளிகள் வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இத்தொடர்பாக தெற்கு ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:- ‘ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு கம்பளி வழங்கப்படாது. பயணிகள் யாருக்கேனும் தேவைப்பட்டால் மட்டுமே கம்பளிகள் வழங்கப்படும். ஆனால், பயணிகளுக்கு தலையணை, தலையணை உறை, பெட் ஷீட்டுகள் தொடர்ந்து வழங்கப்படும். பயணிகளுக்கு ஏதேனும் இதில் மாற்றம் அல்லது புதிதாக பெட் ஷீட்டுகள் தேவைப்பட்டால் எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கலாம். ரயில்வே எடுக்கும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பயணிகள் ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேற்கு ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:- ‘கொரோனா வைரஸ் பரவுவதன் முன்னெச்சரிக்கையாக ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு கம்பளி, பெட்ஷீட் போன்றவை இனி வழங்கப்படமாட்டாது. ஏனெனில் ஒவ்வொரு பயணத்திலும் அதை துவைக்க முடியாது. எனவே பயணிகளே தங்களுக்கு தேவையான பெட்ஷீட் மற்றும் காமப்பாளிகளை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். சிரமத்திற்கு மன்னிக்கவும்’ என்றும் தெரிவித்துள்ளது.

What do you think?

‘இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்துள்ளாரா யுவன்’ மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

வெளியிட்ட ட்ராக் லிஸ்டில் மாற்றம் செய்த ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம்….!