ஒரே நாளில் அதிரடி ஆய்வு..! போதைப் பொருள் வழக்கில் கைது 6 பேர் கைது..! பரபரப்பான அந்த நகரம்..!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட 1 பெண் உட்பட 5 பேருக்கு குண்டர் தடுப்பு காவலில் சிறை வைப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மது விலக்கு அமலாக்கப்பிரிவு எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரக்கோணத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துறையால் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (37) மற்றும் சாந்தி (40) ஆகிய இருவரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் அபர்ணா தலைமையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
அதேபோல் காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு கடத்தி வந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிப் (32), கரீம் (29), அமுல்ராஜ் (29), ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வந்த நிலையில் இவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் 1 பெண் உட்பட 5 பேரை போலிசார் வேலுர் மத்திய சிறையில் அடைத்தனர்.
– லோகேஸ்வரி.வெ