பிக்பாஸ் சின்னத்திரை நடிகர்கள் பாவ்ணி மற்றும் ஆமீருடன் நடிகர் அஜித்குமார் எடுத்துக்கொண்ட செல்பி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது.
இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு நடுவில் நடிகர் அஜித்குமார் வட இந்தியா முழுவதும் இருசக்கர வாகனத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. வட இந்திய சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு கடந்த மாதம் சென்னை திரும்பினார்.
இதனால் சென்னையில் ஒரு வாரம் ஓய்வு எடுத்த நடிகர் அஜித் குமார் கடந்த வாரம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாங்காக் செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார். பாங்காக்கில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் ஏகே 61 பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வரும் நிலையில், சக நடிகர்களான பிக்பாஸ் பிரபலங்கள் பாவ்ணி மற்றும் அமீருடன் நடிகர் அஜித்குமார் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.