முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி நடிகர் அஜித்குமார் சொன்ன வார்த்தை…!!
சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தியது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் சென்னையில் பார்முலா 4 கார் பந்தயப்போட்டி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தியது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், நமது நாட்டில் கார் பந்தயங்களுக்கு அது மிகவும் உந்துசக்தியாக உள்ளதாகவும். இதுபோன்ற போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..