‘விஜய் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அஜித்’ வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் அஜித், விஜய் நடித்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழ்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த ரசிகர்கள் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால் விஜய்யும், அஜித்தும் தாங்கள் இருவரும் எதிரிகள் என்று சொல்லிக்கொண்டதில்லை இருவருமே பொது இடங்களில் சந்திக்கும் போது நட்புறவுடனே பழகுகின்றனர்.

பொதுவாக அஜித் எந்தவொரு விழாவிற்கும் வரமாட்டார். அவ்வளவு ஏன், தன்னுடைய திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு கூட வரமாட்டார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் இசைவெளியீட்டு விழாவிற்கு அஜித் வந்திருந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Kushi Movie Audio Launch

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் குஷி. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தான் நடிகர் அஜித் கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Vijay And Ajith

What do you think?

‘மூன்றாம் உலகப்போரா?’ திடீரென 3 ஏவுகணை சோதனைகளை நடத்திய வடகொரியா!

‘காய்ச்சல், சளி இருந்தால் திருப்பதிக்கு வர வேண்டாம்’ தேவஸ்தானம் அறிவிப்பு!