February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending சினிமா

தல அஜித்தின் சவால்; சொன்ன மாதிரியே நடந்துடுச்சே! – ஒரு சின்ன ஃப்ளாஸ்பேக்

வாலி படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது நடிகர் அஜித் விட்ட சவாலைப் பற்றி, இயக்குநர் எழில் தற்போது பகிர்ந்துள்ளார்.

நடிகர் அஜித் மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்துக்கொண்டிருந்த காலத்தில் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அஜித் நடிக்க இருந்து அதன் பின்னர் மற்ற நடிகர்களின் நடிப்பில் வெளியான படங்கள் நிறைய உள்ளன. அதில் முக்கியமான ஒரு படம் பிரபுதேவா, சரத்குமார், விவேக் நடித்த ‘ஒரு பெண்ணின் மனதை தொட்டு”. எழில் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் நடிகர் அஜித் நடிக்காமல் போனதற்கான காரணத்தையும், அச்சமயம் அஜித் விடுத்த சவால் ஒன்றைப் பற்றியும் அவர் சிறிய ஃப்ளாஸ்பேக்கை பகிர்ந்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் அஜித் கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்ததாகவும், அப்போது அஜித் இயக்குநர் எழிலிடம் வந்து “வாலி படம் ரிலீஸான அப்புறம் என்னோட ரேஜ்ஜே வேறனு தயரிப்பாளர்கிட்ட போய் சொல்லுங்க” என்று சவால் விட்டாராம். அவர் சொன்னது போலவே வாலி படம் வெளிவந்த பின்னாடி அஜித் கிராப் எங்கேயோ போயிடுச்சுதான்.

ஆனாலும், அதன் பிறகு எழில் இயக்கிய ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’ என்ற இரு படங்களிலும் அஜித் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இது என்ன புதுசா இருக்கு? – குழந்தை பிறந்தா அப்பாவுக்கும் லீவு!

Digital Team

அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது சிறுவன் கொடுத்த புகார் வாபஸ்!!!

Digital Team

கோவிட்-19 : பலி எண்ணிக்கை 1,765 ஆக அதிகரிப்பு

Digital Team

இந்துக்களை உஷார் படுத்தும் ஹெச்.ராஜாவின் சர்ச்சை டிவிட்கள்

Digital Team

கொரோனா வைரஸ்; 50 நாட்கள், 2,000 மரணங்கள் – தொடரும் வேதனை. Covid19

Digital Team

இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை! – CAB

Digital Team
You cannot copy content of this page
Madhimugam