‘விஜய்யின் அந்த ரகசியம் எனக்கு தெரியவேண்டும்’ ஹிருத்திக் ரோஷன்!

நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிகர் விஜய் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்கிறார் என்ற ரகசியத்தை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடித்த தூம் 2 படம் மூலம் தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஒரு கடிகார நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்தார் ஹிருத்திக் ரோஷன் அப்போது பிரபல Youtube சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

நடனத்தில் சிறந்து விளங்கும் ஹிருத்திக் ரோஷனிடம் நடிகர் விஜய்யின் நடனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில், “நடிகர் விஜய் எப்படி இவ்வளவு எனர்ஜியுடன் நடனமாடுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் எந்த மாதிரியான உணவை உட்கொள்கிறார் என்ற ரகசியத்தை தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

What do you think?

நாளை விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் GSLV-F 10 ராக்கெட்!

‘250CC இன்ஜின், 150KM High Speed’ சென்னை டிராபிக் போலீசின் புதிய Bike!